திங்கள், 28 நவம்பர் 2022
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: புதன், 18 ஜூலை 2018 (16:54 IST)

அஸ்வின், ஜடேஜா கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறிய குல்தீப்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. டி20 போட்டி தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இந்ங்கிலாந்தும் கைப்பற்றியது. 
 
இந்நிலையில் அடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடரின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
 
இந்திய அணி விவரம்: 
விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப், பாண்டியா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷார்துல் தாகூர். 
 
ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், குல்தீப், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபகாலமாக சிறப்பாக செயல்ப்பட்டு வரும் குல்தீப், அஸ்வின் அல்லது ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தாக உருவெடுக்கக்கூடும் என தெரிகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் துவங்கவுள்ளது.