ரூட் அபார சதம்: தொடரை வென்றது இங்கிலாந்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, ஏற்கனவே டி20 தொடரை வென்றதால், ஒருநாள் தொடரையும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே 1-1 என்ற சமநிலையில் இரண்டு அணிகளும் இருந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 71 ரன்களும், தவான் 44 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்தனர்.
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 44.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.
இங்கிலாந்து அணியின் ரூட் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார். கேப்டன் மோர்கன் 88 ரன்கள் அடித்தார். இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருது ஆதி ரஷித், தொடர் விருது ரூட் ஆகியோர்களுக்கு கிடைத்தது.