வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (20:51 IST)

அதிக வரி செலுத்துவதில் முதல் இடத்தில் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சிறப்பான பேட்டிங், கீப்பிங் மூலம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து போட்டியில் மட்டுமில்லாமல், பல்வேறு விளம்பரங்கள், விளம்பர தூதர் என்ற பல பதவிகளை பெற்றுள்ளார். 
 
இந்நிலையில் பீகார் - ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் தோனி முதல் இடத்தை பிடித்துள்ளார். 2017-18 ஆம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் வரியாக கட்டியுள்ளார். 
 
2016-17 நிதி ஆண்டில் ரூ.10.93 கோடியை கட்டியுள்ளார். இதன்மூலம் கடந்த நிதியாண்டை விட ரூ.1.24 கோடி கூடுதலாக தோனி வருமானவரி கட்டியுள்ளார் எனபது தெரியவந்துள்ளது.
 
தோனி கடந்த 2013-14 ஆம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6 வது ஆண்டாக அவர் பீகார் - ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.