தோனி எப்போதும் இளைஞராகவே இருப்பாரா? சேவாக் கேள்வி
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு தோனி சரியாக ஆட்டத்தை வெளிப்படுத்தாததே காரணம் என பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பின்வருமாறு கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததற்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாததே. முக்கியமான பேட்ஸ்மேன்களான தோனி, விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
அதேசமயம் பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வீசி இருக்கலாம். அதிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.
நீங்கள் நினைப்பதுபோல் தோனி பழைய மாதிரி இளைஞராக இல்லை. அவருக்கும் முதுமை வந்துவிட்டது, வயதாகி கொண்டிருக்கிறது. உண்மையில் தோனி, பொறுப்பேற்று அணியை கடைசிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும்.
ஏராளமான டாட் பந்துகளை ரன்களாக மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் இப்போது இருக்கும் தோனியால் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். இதில் இருந்து அவர் தோனிக்கு ஆதரவாக பேசுகிறாரா அல்லது எதிர்ப்பை தெரிவிக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.