வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (14:28 IST)

ஆன்லைனில் வருமான வரித்தாக்கல்: கவனிக்க வேண்டிய சில...

ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்ய உள்ளோர் சிலவற்றை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது, ஏனெனில் வருமான வரித்துறையின் இணையதளம் கடந்த ஒரு ஆண்டில் ஒருசில மாற்றங்கள் கொண்டுள்ளது. 
 
# வருமான வரி தாக்கல் செய்யும் போது இனி பிறந்த தேதியை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. .
 
# 26 ஏஎஸ் மற்றும் ஐடிஆர்வி ஆகிய விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த விண்ணப்பங்கள் பாஸ்வேர்டு தேவைப்பட்டது, தற்போது இதற்கு பாஸ்வேர்டு தேவையில்லை.
 
# 26ஏஎஸ் விண்ணப்பம் டவுன்லோடு செய்யும் போது, முதலில் எச்டிஎம்எல் வடிவத்தில் வியூ செய்து அதன் பின்னர் பிடிஎஃப் வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
 
# புதியதாக வெரிபிகேஷன் ஆப்சன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்கல் செய்யப்பட்ட கணக்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்த ஆப்சனை பயன்படுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.
 
# வரித்தாக்கலின் போது ஒரு சில விபரங்கள் முன்கூட்டியே தானாக ஃபில் செய்யும் வகையில் புதிய ஆப்சன் தற்போது உள்ளது. 
 
# ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆட்டோ பாப்புலேட் என்ற ஆப்சனை கிளிக் செய்துவிட்டால் அடிப்படை விபரங்களை மறுபடியும் பதிவு செய்ய தேவையில்லை. அதுவாகவே பூர்த்தி செய்துவிடும். 
 
# டிடிஎஸ் விபரங்களும் தானாகவே அப்டேட் ஆகினாலும், அதனை சரிபார்த்துக்கொள்ளவது சிறந்தது.