புதன், 18 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 பிப்ரவரி 2026 (12:38 IST)

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில், ஐசிசி பாகிஸ்தான் வாரியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு மீண்டும் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி கிண்டல் செய்துள்ளார். 
 
உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பயந்து, பிப்ரவரி 15-ம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 
 
இதற்கிடையில், ஐசிசி விதிமுறைப்படி இந்திய அணி கொழும்பு மைதானத்திற்கு செல்லும் என்றும், பாகிஸ்தான் வராவிட்டால் இந்தியாவுக்கு வெற்றி புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியின் விளக்கம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva