தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 18,000 இந்தியர்கள்.. திரும்ப அழைக்க முடிவு..!
- மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசுவது வரவேற்கதக்கது.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
- நேற்றைய பயங்கர சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!
- ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!
கிரிக்கெட்டுக்குள் அரசியலை திணிக்கிறது பிசிசிஐ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.
இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இப்போது மற்றொரு பிரச்சனையைக் கிளப்பியுள்ளது பிசிசிஐ. இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள அரசியல் காரணமாக இப்படி பிசிசிஐ செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் “விளையாட்டில் அரசியலைத் திணிக்கிறது பிசிசிஐ. அது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழாவுக்கு தங்கள் கேப்டனை அனுப்ப விரும்பவில்லை எனக் கூறியுள்ளது. இப்போது ஜெர்ஸியில் பாகிஸ்தானின் பெயரை பொறிக்க முடியாது எனக் கூறியுள்ளது. ஐசிசி இதை நடக்க விடாது என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.