வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (13:32 IST)

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்..! – தயாராகும் இந்திய அணி!

india
ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா – இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்தியாவிலேயே நடத்துவதாக முடிவாகியுள்ளது. இந்த போட்டிகள் செப்டம்பரில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வீரர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.