1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (09:49 IST)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் எழுதிய பாட்டு…. விக்ரம் அப்டேட் கொடுத்த அனிருத்!

விக்ரம் படத்தில் கமல் ஒரு பாடல் எழுதி பாடியுள்ளதை இசையமைப்பாளர் அனிருத் உறுதி செய்துள்ளார்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

படத்தின் முதல் சிங்கிள் நாளை (மே 11) ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தில் கமல்ஹாசன் பத்தல பத்தல என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் கூறியுள்ளார். மேலும் இது சம்மந்தமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசனோடு இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.