வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 ஜூலை 2023 (09:42 IST)

INDvsWI: இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.  இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.