வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (16:56 IST)

உலகின் கேம் சேஞ்சராக நித்யானந்தா உள்ளார் - நடிகை ரஞ்சிதா

ranjitha
இந்த உலகின் கேம் சேஞ்சராக நித்யானந்தா உள்ளார் என்று நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த   நிலையில், அவர் மீது பாலியல் புகார்கள்  கடத்தல் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நித்யானந்தா , கைலாசா என்ற தனித் தீவில் தன் சிஷ்யர்களுடன் வசித்து வருவதாகக் கூறினார்.

அதேபோல், நித்யானந்தாவின் கைலாசா  நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த நெனார்க் நகர  நிர்வாகம் அங்கீகரித்தது.

சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல்  நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இணையதள லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யாந்தா மாயி சுவாமி என்றும் அதற்கு கீழே கைலாசவின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த உலகின் கேம் சேஞ்சரே நித்யானந்தா  என்று  நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.

கைலாசா சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரஞ்சிதா,  பக்தர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அவர் பேசிய  வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது: ''பரமசிவம் கைலாசம் பக்கம் நிற்கிறது.  இந்துத்துவத்தின் புனிதத்தை நெட்வொர்க்காக இணைப்பதுதான் இந்த கைலாசம். இங்கு, பூஜைகள், யோஜா, சந்நியாசம் உள்ளிட்டவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கைலாசா தர்ம்பத்தின் பக்கமே நிற்கும், யாருடைய மிரட்டலுக்கும் இங்கு இடமில்லை… இந்த உலகின் கேம் சேஞ்சராக நித்யானந்தா உள்ளார். கைலாசா முதல் இந்து நாடு.. இங்கு வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது'' என்று கூறியுள்ளார்.