1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. india vs newzeland first T20 match cancel

இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

nz vs ind
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 போட்டி இன்று நடக்க இருந்த நிலையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் மோத இருந்தது. இந்தப் போட்டிக்கான டாஸ் போடும் நேரத்தில் திடீரென மழை வந்ததையடுத்து போட்டி சில மணிநேரங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது
 
ஆனால் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தததை அடுத்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி நடத்த மைதானம் ஏதுவாக இல்லை என்று கூறினார்கள். இதனை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்கலாம் என்று வந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
எந்த கலரில் வேண்டுமானாலும் அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம்… ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்திய விம்பிள்டன்!