வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:16 IST)

இந்தியா முழுவதும் வசூலில் கலக்கிய காந்தாரா…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.