செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:14 IST)

இந்தியா நியூசிலாந்து டெஸ்ட்: டக் அவுட் ஆகி வெளியேறிய ஹிட் மேன்! இந்த போட்டியிலாவது வெல்லுமா?

Rohith Sharma

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

 

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இந்திய அணி உலக டெஸ்ட் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாகும்.

 

இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விளையாட தொடங்கியுள்ளது.
 

 

இந்த இன்னிங்ஸில் ஓப்பனராக களமிறங்கிய ரோஹித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்காமல் டிம் சவுதியின் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். முதல் டெஸ்ட்டிலும் வரிசையாக விக்கெட் விழுந்த நிலையில் ரோஹித் சர்மாவின் டக் அவுட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷர்ப்ராஸ் கான் உள்ளிட்டோர் பேட்டிங்கில் வலிமை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K