வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (13:19 IST)

சொந்த மண்ணில் அதிக டக்-அவுட் வெளியேற்றம்! - 46 ரன்களில் இந்தியாவை மூட்டை கட்டிய நியூசிலாந்து!

Indian Cricket team

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து டக் அவுட் ஆகி வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக டாஸ் போடுவது தாமதப்பட்ட நிலையில், பின்னர் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

ஓப்பனர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 9 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து சர்ப்ராஸ் கானும் டக் அவுட் ஆனார். ரிஷப் பண்ட் மட்டும் நின்று 20 ரன்கள் வரை அடித்து அவுட் ஆனார்.

 

அதன் பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் என முக்கிய வீரர்கள் அனைவருமே டக் அவுட் ஆனார்கள் இதனால் தற்போது இந்திய அணி 31 ஓவர்களில் வெறும் 46 ரன்களே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

 

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டாப் 7 பேட்டர்களில் 4 பேர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறுவது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K