ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2024 (07:50 IST)

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை பந்தாடிய இந்தியா..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. தேஜல் 42 ரன்களும், தீப்தி சர்மா 41 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணி 40.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புரூக் 39 ரன்களும், கிரீன் 31 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில், இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே அகமதாபாத் மைதானத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறும். மேலும், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 29ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva