1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:51 IST)

நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு: பிரதமர் மோடி

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்புவதே இந்தியாவின் இலக்கு என்று கூறியுள்ளார்.  
 
சந்திராயன் 3 வெற்றி மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் விண்வெளிக்கும் நிலவுக்கும் மனிதனை அனுப்புவது தான் அடுத்த இலக்கு என்றும் பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து தெரிவித்துள்ளார்.  
 
அதுமட்டுமின்றி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தையும் விரைவில் அனுப்ப உள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
விண்வெளி துறையில் அமெரிக்க ரஷ்யாவை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பும் திட்டம் நிறைவேறிவிட்டால் இந்தியா மிகப் பெரிய சாதனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva