IND vs ENG 2வது டெஸ்ட்: துவக்கம் முதலே அதிரடியை காட்டுமா இந்தியா?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று கலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த போட்டியில் இந்தியா துவக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது. அதே போல இங்கிலாந்தின் ஆட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
எனவே இந்த ஆட்டத்தை இந்திய அணி மேலும் கவனத்தோடு விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு...
இந்தியா: சுப்மான் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல், ஜஸ்பிரிபுத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, டேன் லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ் அல்லது ஆலி ஸ்டோன்.