1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India set 187 runs as target to Zimbabwe

ரன் மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ்! - ஜிம்பாப்வே அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

suryakumar yadav
தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் சுற்று இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. க்ரூப் 1 ல் விளையாடிய நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2ல் விளையாடிய பாகிஸ்தான் அணியும் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.

லீக் போட்டியின் கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்துள்ளது.

ரோகித் சர்மா 15 ரன்கள், விராட் கோலி 26 ரன்களில் வெளியேறினாலும், கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஸ்கோர் நிலவரத்தை சமாளித்து வந்தார். நான்காவதாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 61 ரன்களை குவித்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.

அடுத்ததாக 187 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது. இந்தியா தனது பீல்டிங்கால் அவர்களை முறியடிக்குமா என எதிர்பார்க்கபடுகிறது.

Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
இந்தியா பேட்டிங்: கே.எல்.ராகுல் அபார அரைசதம், ஆனாலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள்: