செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (13:08 IST)

மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டியா? ரசிகர்கள் உற்சாகம்

India vs pakistan
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. எனவே இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் முடிவடைந்த வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இருப்பதால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது 
 
அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பில்லை என்றாலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva