1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2022 (12:06 IST)

துரத்தி வந்த கடற்கொள்ளையர்? கினியா கடற்படையிடம் சிக்கிய இந்திய மாலுமிகள்!

Ship
கினியாவில் கச்சா எண்ணெய் ஏற்ற சென்ற கப்பலின் மாலுமிகளை கினியா கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா கச்சா எண்ணெய் வணிகத்தில் முக்கிய நாடாக உள்ளது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வேவை சேர்ந்த கப்பல் ஒன்று சென்றுள்ளது. அப்போது கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை மறித்ததால் அவர்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய கினியா கடற்படையினர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனர். அந்த கப்பலும் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கப்பல் நிறுவனம் கப்பலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கப்பலில் பயணித்த இந்தியாவை சேர்ந்த மாலுமிகளை விடுவிக்க இந்திய தூதரகம் கினியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K