தொடர்புடைய செய்திகள்
- ட்ரம்ப் வரிவிதிப்பால் வேலையிழப்பு! திருப்பூரை விட்டு வெளியேறும் பீகார் தொழிலாளிகள்!
- விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது அறம் இல்லாதது… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிருப்தி!
- இந்தியா - பாகிஸ்தான் போட்டி பஹல்காம் தியாகத்தின் அவமானம்! - இறந்தவரின் மனைவி வேதனை!
- ஏன் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கவில்லை… கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பதில்!
- அமீர்கான் வைத்த நிபந்தனை… எழுந்த கருத்துவேறு – சூப்பர் ஹீரோ படம் ட்ராப் ஆக இதுதான் காரணமா?
முதல் ஆளாக சூப்பர் நான்கு சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!
நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடர் பெரியளவில் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஏனென்றால் போட்டிகள் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவுகளாக அமைகின்றன. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனைக் கூட மந்தமாகதான் இருந்தது.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிக எளிதான வெற்றியைப் பெற்றது. UAE உடனான போட்டியை ஐந்தாவது ஓவரிலேயே வென்றது. அதே போல பாகிஸ்தானுடனான போட்டியையும் 16 ஆவது ஓவரில் வென்றது. இதன் மூலமாக இந்திய அணியின் நெட் ரன் ரேட் 4.7 என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில் தற்போது முதல் ஆளாக அடுத்த சுற்றான சூப்பர் நான்கு சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஓமன் அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்