தொடர்புடைய செய்திகள்
- இந்திய வீரர்களை பயமுறுத்த ஆஸ்திரேலிய ஊடகங்க முயல்கின்றன… சுனில் கவாஸ்கர் காட்டம்!
- ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்… இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சொன்ன கருத்து!
- ஆஸ்திரேலியா திரும்பி இந்திய அணியோடு இணைந்த கம்பீர்..!
- வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!
இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து இருவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பேசும்போது ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்த ஒத்துக்கொண்டு அதற்காக லாபத்தில் பங்கு கேட்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் நாம் இந்தியாவோடு நட்புறவோடு விளையாட வேண்டும். அவர்கள் நாட்டுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டுமென்பதுதான் என் ஆசை.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்