1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2024 (08:48 IST)

ஆஸ்திரேலியா திரும்பி இந்திய அணியோடு இணைந்த கம்பீர்..!

பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த  டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தினார் ஜெய்ஸ்வால். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் இந்திய அணிக்கு மிக முக்கியமானத் திருப்புமுனையாக அமைந்தது.

கம்பீரின் பயிற்சியின் கீழ் அடுத்தடுத்து இரண்டு தொடர்களை இழந்த நிலையில் பெர்த் டெஸ்ட் வெற்றி அவருக்கு சிறு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். இந்த வெற்றியை இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய கட்டாயமும் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு நடுவே கம்பீர் தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.