செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:04 IST)

இந்திய வீரர்களை பயமுறுத்த ஆஸ்திரேலிய ஊடகங்க முயல்கின்றன… சுனில் கவாஸ்கர் காட்டம்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் பலரும் புதுப்பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ராகுல் சிறப்பாக இருக்கிறார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என தொடர்ந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுபற்றி பேசியுள்ள கவாஸ்கர் “ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் விதமாக செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டு வருகின்றன. ஆனால் இது பலனளிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.