வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:58 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு!

ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோத அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மற்ற எல்லா போட்டிகளையும் விட பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி உள்ளது.

செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த போட்டி இலங்கையின் பல்லேகலேவில் நடக்க உள்ளது. இந்த மைதானத்தில் போட்டி நடக்கும் அன்று மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.