1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:41 IST)

ஆசிய கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதை எடுத்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியை தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் 5 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட்டை இழந்து விட்டது. 
 
தொடக்க ஆட்டக்காரரான ஃபாக்கர் ஜமான் என்பவர்  14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து உள்ளார்.  நேபாள பந்துவீச்சாளர் கரன் இந்த விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இமாம் உல்ஹக் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர்
 
Edited by Siva