வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (17:56 IST)

விக்ரம் லேண்டரை படம் பிடித்த பிரக்யான் ரோவர் ! வைரலாகும் போட்டோ

Pragyan Rover
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3   எனும் விண்கலத்தை  சமீபத்தில்  விண்ணுக்கு  அனுப்பிய நிலையில்,   விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கிய  நிலையில் பள்ளம் மேடுகளை பார்த்து ரோவர் பயணித்து வருகிறது.

நேற்று நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர், நிலவில் தென்பகுதியில், கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், குரோமியம், மாங்கனீசு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளளது.

இதையடுத்து, அங்கு ஹைட்ரஜன் உள்ளதா என கண்டறிந்து வருகிறது.

இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர்,விக்ரம் லேண்டரை  புகைப்படம் எடுத்துள்ளது. இதை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.