வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (09:41 IST)

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் சிறப்புகள் என்ன??

இன்று அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. 

 
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி இன்று அகமதாபாத்தில் உள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக 3வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. 
 
63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. 
 
பிரதான மைதானத்தில் மட்டுமே 11 ஆடுகளங்கள் உள்ளன. 8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாத வகையில், உடனடியாக நீரை உறிஞ்சி வெளியேற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 
 
அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், நீச்சல்குளம், பயிற்சிக்கென 2 மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
6 உள்ளரங்க ஆடுகளங்களும், அவற்றில் பவுலிங் மெஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
விருந்தினர்கள் தங்குவதற்காக 50 டீலக்ஸ் அறைகளுடன் க்ளப் ஹவுசும் வளாகத்தில் உள்ளது.