ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (08:10 IST)

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த சுற்றில் நேற்று சமபலம் கொண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதலில் அதிரடியாக ஆடினாலும் பின்னர் தடுமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் விக்கெட்கள் அடுத்தடுத்து விழ அந்த அணியால் 163 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. இதனால் தேவைப்படும் ரன்ரேட் மளமளவென அதிகமானது. அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்களான ஹாரி ப்ரூக் மற்றும் லியான் லிவிங்ஸ்டன் ஆகியோர் கடைசி நேர அதிரடியில் ஈடுபட்டு ரன்களை சேர்த்தனர். ஆனாலும் முக்கியமான கட்டத்தில் இருவருமே ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா  அணி வெற்றி பெற்றது.