1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IND vs ENG-4th Test India lead by 90 runs

IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய அணி 90 ரன்கள் முன்னிலை

england
இன்றைய 2 வது ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இங்கிலாந்தைவிட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற வகையில் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில் இன்று இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 75 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது விளையாட தொடங்கியுள்ள இந்திய அணி 38 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களே எடுத்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பாண்ட் இருவரும் நிதானமாக விளையாட்டி ரன்கள் சேர்த்தனர். இதில் ரிஷப் பாண்ட் அரைசதம் கடந்தார்.வஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து 60 ரன்களுடனும் ,அக்சர்  பட்டேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தைவிட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி 294 ரன்களுக்கு இரண்டாவது நாள் ஆட்டம் முடிவடைந்தது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இன்னும் வேகம் குறையாத சேவாக்: முதல் பந்திலேயே பவுண்டரி