திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (17:06 IST)

சதமடித்து ஏமாற்றம் அளித்து ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். ஆனால் 101 ரன்களில் அவர் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் பந்தில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.