அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தானுக்கு அபராதம் விதித்த ஐசிசி


Abimukatheesh| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (18:22 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கையுடன் நடைப்பெற்ற போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முன்றாவது லீக் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி வெற்றிப்பெற்றது. அதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்துள்ளது. 
 
பாகிஸ்தான் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றுப்பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :