இந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்


Abimukatheesh| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (15:49 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவை நாய் என குறிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் நாளை நடக்கவுள்ள இரண்டவது அரை இறுதிப் போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் மோதுகின்றன். இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
புலி ஒன்று நாயை துரத்துவது போல் உள்ள அந்த புகைப்படத்தில், நாய் மீது இந்திய கொடியும்; புலி மீது வங்கதேச கொடியும் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, டோனி தலை வங்கதேச பவுலர் கையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி என்றால் ரசிகர்கள் வெறிதனமாக இருப்பார்கள். ஆனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களையும் மிஞ்சிவிட்டனர்.   


இதில் மேலும் படிக்கவும் :