குணோ தேசிய பூங்காவில் விடப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு.
ஆப்பிரிக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கி புலி இன்று உயிரிழந்தது.
இந்தியாவில் கடந்த 1952 ஆம் ஆண்டு சிவ்விங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்புலிகளை இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ஆப்பிரிக்காவிலுள்ள நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலிகள் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, நபீபியவில் இருந்து 3 ஆன் சிவிங்கில் புலிகள், 5 பெண் சிவிங்கிப் புலிகள் என மொத்தம் 8 புலிகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
இவைகள் மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கபட்டு வந்தன.
இந்த நிலையில், நமீபியா நாட்டிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதி விமானம் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப் புலி ( ஷாஷா) இன்று உயிரிழந்தது.சிறுநீரகக் கோளாறு இதற்கு இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.