வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (19:03 IST)

இந்த உலகக் கோப்பையில் அவர் கேம் சேஞ்சராக இருப்பார்- யுவராஜ் சிங்

இந்த  உலகக் கோப்பையில்  அவர் கேம் சேஞ்சராக இருப்பார்- யுவராஜ் சிங்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

தற்போது பயிற்சி ஆட்டம் நடந்து வரும் நிலையில்,  இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 50 ஓவர்  உலகக் கோப்பையில் கேம் சேஞ்சராக கில் இருப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்த தலைமுறையின் சிறந்த வீரராக வருவதற்கான திறமை கிம்பனிடம் உள்ளது. அவர் தனது 19 வயதிலிருந்து ஒரு சாதாரண வீரரை விட 4 மடங்கு அதிகமாக உழைத்து வருகிறார். சிறிதும் பயமின்றி பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பவராக உள்ளார். எனவே உலகக் கோப்பையில் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறியுள்ளார்.