1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (07:38 IST)

இந்திய அணி அவரை எடுக்காமல் தவறு செய்து விட்டது…. உலகக் கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங் கருத்து!

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. சமீபகாலமாகவே அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சஹாலை அணிக்குள் எடுக்காமல் பிசிசிஐ தேர்வுக்குழு தவறு செய்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதில் “அவரை உலகக் கோப்பையில் தேர்வு செய்யாதது தவறு. அதற்காக வருந்தவேண்டி இருக்கும். எதிரணிக்கு ஆபத்தாக விளங்கும் அவர் எந்த நேரத்திலும் விக்கெட் எடுக்கும் திறன் பெற்றவர். அவரைக் கட்டாயம் உலகக் கோப்பை அணியில் எடுத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஹர்பஜன் சிங்கும் சஹாலை அணியில் எடுத்திருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.