1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (13:31 IST)

உலகக் கோப்பை தொடரின் ''Dil Jashn Bole ''தீம் பாடல் ரிலீஸ்

Dil Jashn Bole  ICC world cup song
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் உள்ள ஓட்டல்கள், மேன்சன்கள் புக்கிங் ஆகிவருகிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் பாலிவுட் முன்னணி நடிகர் ரண்வீர் சிங் நடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த ஆன்த்தம் பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். இப்பாடலை ஸ்லோகே லால், சாவேரி வர்மா ஆகியோர் எழுதியுள்ளனர்.  இப்பாடல் ஐசிசி  யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.