திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (15:51 IST)

CSK அணியின் அதிகாரப்பூர்வ ‘தளபதி’ இவர்தான்..! – போஸ்டர் வெளியிட்டு அறிவித்த சிஎஸ்கே நிர்வாகம்!

Greatest of all time
இன்று சிஎஸ்கேவின் போட்டி நடைபெற இருக்க, நடிகர் விஜய்யின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் தளபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.



சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே அது தோனி ரசிகர்களின் கோட்டைதான். சிஎஸ்கேவின் என்றென்றும் நிரந்தர ‘தல’யாக தோனி வலம் வருகிறார். தோனி தவிர மேலும் சில விருப்பமான சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ரசிகர்கள் செல்லமாக பெயர் வைப்பதுண்டு. சுரேஷ் ரெய்னாவையும் அப்படிதான் அன்பாக ‘சின்ன தல’ என்று அழைத்தனர்.

அந்த வரிசையில் சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை ஜடேஜாவுக்கு இருந்து வருகிறது. கடந்த சீசனில் இறுதிபோட்டியில் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதை கவர்ந்தவர், இந்த சீசன் தொடங்கியது முதலே தமிழில் பேசி வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் உங்களுக்கு ‘தளபதி’ என பட்டம் கொடுத்தால் ஏற்பீர்களா என்று கேட்டபோது , ரசிகர்கள் அந்த பட்டத்தை தனக்கு விரைவில் வழங்குவார்கள் என தான் எண்ணுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘கோட்’ பட போஸ்டர் போல டிசைன் செய்யப்பட்ட அந்த போஸ்டரில் ஜடேஜா போட்டோவுடன் ‘தளபதி’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. ஓரத்தில் Verified என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ தளபதியாக ஜடேஜா அறிவிக்கப்படுகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K