கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!
வங்கதேச வீரர் ஒருவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அப்போது, அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
அடுத்து, டாக்கா மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், சாலை வழியாக பயணம் செய்ய முடியாது என மருத்துவர் பரிந்துரை செய்ததால், மைதானத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஹெலிகாப்டர் மூலம் டாக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran