ஹர்திக் பாண்ட்யா குணமாக இத்தனை மாதங்கள் ஆகுமா? இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தி!
உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்தே அவர் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நடக்க உள்ள ஆஸ்திரேலியா டி 20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அதனால் அந்த டி 20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுவதுமாக காயத்தில் இருந்து குணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும் என சொல்லப்படுகிறது. அதனால் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் நேரடியாக களமிறங்குவார் என சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஒரு சில நாட்களிலேயே டி 20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சர்வதேச போட்டிகளில் நேரடியாக உலகக் கோப்பை தொடரில்தான் அவர் களமிறங்குவார் என தெரிகிறது.