1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami ex wife controversial post on india defeat

இந்திய ரசிகர்களை எரிச்சல் ஊட்டிய முகமது ஷமியின் முன்னாள் மனைவின் இன்ஸ்டா பதிவு!

முகமது ஷமி
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த இலக்கை 4 விக்கெட்கள் மட்டும் இழந்து 43 ஆவது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்ற வலியில் இருந்து இன்னும் இந்திய ரசிகர்கள் மீளவில்லை. இந்நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நல்ல இதயம் உள்ளவர்கள் வெற்றி பெற்றார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஷமியிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஹாசின் தொடர்ந்து ஷமியை தாக்குவது போல பதிவிட்டு வரும் நிலையில் இப்போது இந்திய அணியின் தோல்வியை கொண்டாடும் விதமாக பதிவிட்டுள்ளது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் பதிவில் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அவரை ஏன் நம்பவில்லை… ரோஹித் ஷர்மாவை கேள்விக் கேட்கும் கம்பீர்!