1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (11:21 IST)

உலகக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்… ஹிப் ஹாப் ஆதிக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அறியப்படும் ஹிப் ஹாப் ஆதி லண்டன் விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது அவரிடம் சென்று கைகுலுக்கி “உலகக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்” என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

அவர் ஹிப் ஹாப் ஆதியை ரோஹித் ஷர்மா என தவறாக புரிந்துகொண்டு இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிகிறது. இது சம்மந்தமான வீடியோவை ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர அது கவனம் பெற்றுள்ளது. முன்பு ரோஹித் ஷர்மாவும் மிர்ச்சி சிவாவும் ஒரே மாதிரி இருப்பதாக மீம்கள் அதிகளவில் பகிரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.