1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (07:27 IST)

இந்திய அணியில் கம்பீரின் முதல் தொடர்… இலங்கை சீரிஸின் அட்டவணை வெளியீடு!

உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ஜூலை 26ஆம் தேதி முதல் டி20 போட்டி நடக்க, ஜூலை 27 மற்றும் ஜூலை 29 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகளும் நடக்கவுள்ளன. மூன்று போட்டிகளும் பாலக்காலே மைதானத்தில்தான் நடக்கும் என சொல்லப்படுகிறது.

ஒருநாள் தொடரைப் பொருத்தவரை ஆகஸ்ட் 1ல் முதல் ஒருநாள் போட்டியும் ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அடுத்த இரண்டு போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளதாக அறிவிகப்பட்டுள்ளன.