1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya may appointed as fulltime t20 team captain

டி 20 அணிக்கு ஹர்திக்கைக் கேப்டனாக்க முடிவா?... பிசிசிஐ ஆலோசனை!

சேத்தன் சர்மா
டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது. இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த அதிரடி முடிவை அடுத்து இந்திய டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
“ஏன் சஹாலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பில்லை…” தினேஷ் கார்த்திக் பதில்!