1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (20:33 IST)

சூரிய கிரகண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

சூரிய கிரகண நிகழ்ச்சியில்  பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது

சூரிய கிரணம் சமயத்தின் போது உண்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கும், வையிற்றில் வளரும் குழந்தைகக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  நம்பப்படுகிறது.

ஆனால், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் கர்ப்பிணிகள் சூரிய கிரணமம் சமயத்தின்  மறைந்துகொள்வதில்லை.

இந்த கிரகணத்தின்போது உண்பதால் பிரச்சனை வரும் அறிவியல் ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி சூரியகிரகணத்தின்போது, பெரியார் திடலில் நடந்த மூட நபிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் எழிலரசிக்கு இன்று ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj