1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya have all qualification to become odi captain

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பாண்ட்யா அத்தனை தகுதிகளும் பெற்றுள்ளார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

இந்தியா
ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றார்.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு அவர்தான் ஒருநாள் தொடருக்கான அணியில் கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது. அதற்கேற்றார் போல இப்போது அவர் ஒரு நாள் அணிக்கு துணைக் கேப்டனாக ப்ரமோஷன் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரைப் பற்றி பேசியுள்ள சபா கரீம் “ஹர்திக் குறைந்த இலக்குள்ள போட்டிகளில் நிதானமாக விளையாடுகிறார். முன்பு அவர் ஆட்டத்தில் இந்த நிதானம் இருந்ததில்லை. துணை கேப்டனாக செயல்பட்ட பிறகு அவரிடம் இந்த நிதானம் கூடியுள்ளது. அதனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகும் அத்தனை தகுதிகளும் அவர் பெற்று வருகிறார்” எனக் கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
508 ரன்கள் நாட் -அவுட்: 13 வயது பள்ளி மாணவர் சாதனை!