கடும் பொருளாதார நெருக்கடி.. ராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்ய இலங்கை முடிவு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து ராணுவ வீரர்களை குறைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் பல்வேறு வகைகளில் செலவை குறைக்க திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை குறைக்க இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 30000 ஆக இருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் மிச்சப்படும் பணத்தை வைத்து தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கு தேவையான திட்டங்கள் வகுப்பதில் செலவு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran