தொடர்புடைய செய்திகள்
- விராட் கோலிக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை… பயிற்சியின் போது நடந்தது என்ன?
- இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை… காரணம் இதுதான்!
- ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டியின் போது இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பு.. பாகிஸ்தான் வாரியம் கண்டனம்!
- இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது-பாகிஸ்தான் பயிற்சியாளர்!
- மெரினா, பெசண்ட் நகர் பீச்களில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேரடி ஒளிரப்பு!
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை…ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!
சமீபகாலமாக பாகிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் எந்த பெரிய சாதனையையும் படைக்கவில்லை. மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றது. அந்த அணியில் பல குழப்பங்கள் குளறுபடிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அந்நாட்டு வாரியம் நடத்துகிறது. இந்த தொடரை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற ஆவல் அந்நாட்டு ரசிகர்களிடம் மேலெழுந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் முதல் போட்டியிலேயே நியுசிலாந்து அணியிடம் மண்ணைக் கவ்வியது. இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணி பற்றி விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் “நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும்போது அவர்கள் எங்களை வென்று விடுவார்களோ, என்ற அச்சம் இருக்கும். ஏனென்றால் அப்போது நிறைய மேட்ச் வின்னர்கள் அந்த அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய அணியில் அப்படிப்பட்ட வீரர்கள் இருந்தாலும், அணிக்குள் ஒற்றுமை இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறியுள்ளார்.