இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை… காரணம் இதுதான்!
இன்று நடக்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண கிரிக்கெட் உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.
வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரில் இரு அணிகளும் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியிலாவது ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக நேற்று பயிற்சியிலேயே ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதை இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில்லும் உறுதிப் படுத்தியுள்ளார். இதனால் இன்றைய போட்டியில் பண்ட் ஆடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.